புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2020

கொழும்பில் துப்பாக்கிசூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாருடையது?

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் சிரேஸ்ட முகாமையாளர் என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் சிரேஸ்ட முகாமையாளர் ரஜீவ ஜயவீர சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தன்னைதானே சுட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல் துறை தெரிவித்துள்ளனர்.


ரஜீவஜெயவீரவின் சடலத்திற்கு அருகில் கடிதமொன்று காணப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.


ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் முகாமையாளரான ரஜீவஜெயவீர கொழும்பு டெலிகிராவிற்கு கட்டுரைகளை எழுதிவந்துள்ளார்.

கொழும்பு டெலிகிராபின் ஆசிரியர் உவிந்து குருகுலசூரியரஜீவ ஜெயவீரவின் மரணம் குறித்து எழுதியுள்ளார். அவர் எழுதிய மூன்று பக்க கடிதத்தை தான் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கொவிட் நிதியத்திற்கு அரைமில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளார்,தனது வேலையாளின் வங்கிக் கணக்கில் ஒரு மில்லியனை வைப்பு செய்துள்ளார் என தெரிவித்துள்ள உவிந்து சடலமாக மீட்கப்பட்டவர் 151.000 ரூபாய்க்கு துப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளார்,அதனை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமைக்காக கவலை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

ரஜீவ டுவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார் எனினும் தற்போது அவரது டுவிட்டர் கணக்கு செயல் இழக்கச்செய்யப்பட்டுள்ளது, அது எப்போது இடம்பெற்றுள்ளது என்பது தெரியவரவில்லை www.pungudutivuswiss.com

ad

ad