புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2020

வடக்கின் தேர்தல் .-வக்கிர அரசியல்- ஒரு பார்வை

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை தமிழர்  தரப்பின் மூன்று அணிகளும் பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன 

மார்ச் மாதம் முதல்வாரம் கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுத்தேர்தல் இரண்டு தடவை ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னர், ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

196 தொகுதிகள் ஊடாகத் தெரிவாகும் உறுப்பினர்களைத் தவிர மிகுதி 29 பேரும் தேசியப் பட்டியலூடாகத் தெரிவாவர்.

இருபது அரசியற் கட்சிகளும், முப்பதினான்கு சுயஇச்சைக் கட்சிகளுமென மொத்தம் 7452 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

தேர்தலில் வாக்களிக்க 16,263,885 பேர் இடாப்பில் பதிவு பெற்றுள்ளனர். இவர்களுள் சுமார் 70 வீதமானவர்கள் வாக்களிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏழு உறுப்பினர்களைத் தெரிவதற்கான யாழ்ப்பாண மாவட்டத்தில் (கிளிநொச்சி உட்பட)  பத்தொன்பது அரசியற் கட்சிகளும், பதினான்கு சுயஇச்சைக் குழுக்களுமென 330 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 571,848 வாக்காளர் உள்ளனர். 

வன்னி மாவட்டத்தில் (முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்) ஆறு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய பதினேழு அரசியற் கட்சிகள், 28 சுயஇச்சைக் குழுக்களுமென 405 பேர் போட்டியிடுகின்றனர். இங்குள்ள வாக்காளர் தொகை 287,024. 

ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 409,808. இங்கு பதினாறு அரசியற் கட்சிகள் 22 சுயஇச்சைக் குழுக்கள் சார்பில் 304 பேர் போட்டியிடுகின்றனர். 

திருமலை மாவட்டத்தில் நான்கு பேர் தெரிவு செய்யப்படுவர். 288,868 வாக்காளர்கள் உள்ள இங்கு பதின்மூன்று அரசியற் கட்சிகள் மற்றும் பதினான்கு சுயஇச்சைக் குழுக்கள் சார்பில் 189 பேர் போட்டியிடுகின்றனர். 

திகாமடுல்ல எனும் அம்பாறை மாவட்டத்தில் ஏழு ஆசனங்களுக்காக இருபது அரசியற் கட்சிகள் மற்றும் 34 சுயஇச்சைக் குழுக்கள் சார்பில் 189 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு வாக்காளர் தொகை 513,929. 

ஆகக்கூடியதாக இருபது வரையான தமிழர்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யக்கூடியதாக எதிர்பார்க்கப்படும் வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தல் திருவிழா கொடியேறியுள்ளது. 

அதற்கு நிகராக தெற்கும் மேலெழுந்துள்ளது. கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் பெற்ற வெற்றியிலும் பார்க்க அதிகூடிய மெகாவெற்றியைப் பெறும் இலங்குடன் மகிந்தவின் முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. 

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறும் இலக்குடன் (150) மகிந்த - கோதபாய சகோதரர்கள் தேர்தல் குதிரையை ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இது கிடைக்குமானால் பத்தொன்பதாவது திருத்தத்தை ரத்துச் செய்வது அவர்கள் எதிர்பார்ப்பதுபோல இலகுவான காரியம். 

சிங்களத் தரப்பில் மாற்றுத் தலைமையாக இதுவரை இருந்துவந்த ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழ்நிலையை சரியாகப் பந்தாட மகிந்த அணி வியூகம் வகுத்துள்ளது. 

ரணில் அணியும், சஜித் அணியும் தப்பித்தவறி மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால்கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியாதிருக்கும் சமகால அரசியற் போக்கு மகிந்த தரப்புக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். 

கடந்த காலத் தேர்தல்களின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிமுக்கியமான ஓர் அம்சத்தை; முன்னிறுத்தி தமிழ் மக்களிடம் பெரும்பான்மை வாக்குக் கேட்பது வழக்கம். 

சிங்கள மக்களின் வாக்குகள் எப்போதும் இரண்டாகப் பிளவுபடுவதால் தமிழரின் ஆதரவின்றி எந்தவொரு சிங்களக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாதென்பதால், கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியாக பலமுடன் வெற்றி பெற தமிழ் மக்கள் ஏகோபித்து தங்கள் வாக்குகளை கூட்டமைப்புக்கு வழங்க வேண்டுமென்பது இவர்களது கடந்த காலக் கோரிக்கையாக இருந்தது. 

ஆனால், கடந்த வருட ஜனாதிபதித் தேர்தல் இதனைப் பொய்யாக்கி விட்டது. 

தமிழரின் ஆதரவு மட்டுமன்றி முஸ்லிம்களின் ஆதரவுகூட இல்லாது தங்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமென்பதை சிங்கள பௌத்த பேரினவாதம் கோதபாயவின் வெற்றியினூடாக நிரூபித்துக் காட்டியது. இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் தனிச்சிங்கள ஆட்சியென்ற புதிய சகாப்தத்தை உருவாக்கியது. 

இந்தப் பின்புலத்தில், ஆகஸ்ட் 5ம் திகதிய தேர்தலைச் சந்திப்பது கூட்டமைப்புக்கு புதியதொரு அனுபவம். அதுமட்டுமன்றி தமிழர் தாயகத்தில் மாற்று அணிகள் (மாற்றுத் தலைமையன்று) பலமான போட்டியாளர்களாக இத்தேர்தலில் களம் இறங்குவது கூட்டமைப்புக்கான சவாலாகவும் பார்க்கப்படுகிறது. 

வடமாகாண சபைத் தலைவராக இருந்த சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான புதிய அணி வடக்கைப் பொறுத்தளவில் கூட்டமைப்புக்கு உண்மையாகவே ஒரு தலையிடியாக மாறியுள்ளது. அதேசமயம், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தேசிய முன்னணி களத்தின் பெறுமானமுள்ள இன்னொரு போட்டியாளராக நிற்கின்றது. 

வடக்கில் இவை இரண்டையும் அவதானமாகக் கையாள வேண்டிய விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ள கூட்டமைப்புக்கு, அவர்களின் உள்வீட்டுக்குள் உருவாகியுள்ள சுமந்திரன் எதிர்ப்பலையை கையாளுவது ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. 

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சமூக ஊடகங்கள் வழியாக சுமந்திரன் மீதான தாக்குதல் கூட்டமைப்பின் ஒரு குழுவினரால் மின்னல் வேகத்தில் நடத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டனவாயினும் தமிழரசுச் கட்சியின் சில முன்னாள் எம்.பி;.க்கள் தொடர்ந்து சுமந்திரனை இலக்கு வைத்து தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். 

தமிழ் மக்கள் பிரச்சனைத் தீர்வு, புதிய அரசியலமைப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பவற்றுக்கு அப்பால் பொதுமக்கள் மத்தியில் கூட்டமைப்பு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி இன்னொரு அலையாகக் காணப்படுகிறது. 

இதிலிருந்து தற்காலிகமாக விடுபட ஏதாவது புதிய உபாயத்தைக் கையாள வேண்டிய சூழ்நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இப்போதைக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள ஆயுதம் முன்னாள் போராளிகள். 

இவர்களை தங்கள் பக்கம் இழுப்பது, இவர்களுக்காகக் குரல் கொடுப்பது, இவர்கள் தங்களோடுதான் உள்ளனர் என்றவாறு காட்டுவது என்பவற்றில் கூட்டமைப்பினர் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். 

இதுவரை தொடங்கிய சகல முன்னெடுப்புகளிலும் பிசுபிசுத்துப் போன நிலையிலுள்ள தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரையும் ஒன்றிணைந்து தங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் ஓரளவுக்கு தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கலாமென்பது இவரது கணிப்பு. 

சில வாரங்களுக்கு முன்னர் சிங்கள தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்று கூறி, இதனை எங்கும் எப்போதும் துணிந்து கூறுவேன் என்று மார்பு தட்டிய சுமந்திரன் இப்போது தேர்தல் காய்ச்சலால் போலும் சடுதியாக குததுக்கரணம் அடித்துள்ளார். 

தமிழினத்தின் விடிவுக்காகப் போராடிய முன்னாள் போராளிகளின் பங்களிப்பு தீர்வு நோக்கிய இன்றைய தங்களின் போராட்டத்துக்கு அத்தியாவசியமானது என்றும், அவர்களை தமிழரசுக் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இந்த வாரம் கூறியுள்ளார். 

இங்கு இவர் கையாண்டுள்ள வார்த்தைப் பிரயோகம் கவனிக்கப்பட வேண்டியது. தேர்தல் முடிந்த பின்னர், இன்னொரு சந்தர்ப்பத்தில் இதனைக் குறிப்பிடும்போது அவர்களை விடுதலைப் புலிப் போராளிகள் என்று குறிப்பிடவில்லையென்றும் முன்னாள் போராளிகள் என்றே குறிப்பிட்டேன் என்று விளக்குவதற்கான முன்னெச்சரிக்கையாக சுமந்திரனின் வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்க முடிகிறது. 

தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையில் சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் போராளிகளைச் சேர்த்துக் கொள்ள தீர்மானம் வந்தபோது தாம் ஒருவர் மட்டுமே அதனை ஆதரித்ததாக சுமந்திரன் தெரிவித்திருந்தார். 

இதனை முற்றாக மறுக்கும் காணொளி ஒன்றை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள பிரபல சட்டவாளர் தவராசா வெளியிட்டுள்ளார். 

கொழும்புக் கிளையில் அன்று முன்னாள் போராளிகளை இணைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டவேளை அதற்கு ஆதரவு வழங்காத ஒரே ஒரு நபர் சுமந்திரன் தான் என்பதை இவர் வெளிப்படுத்தியுள்ளார். 

தேர்தல் நெருங்கும் வேளையில் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பான, ஆதரமற்ற, அரசியல் நோக்கம் கொண்ட, தனது சுயநலத்துக்காக அப்பட்டமான பொய்யை சுமந்திரன் கூறியுள்ளதாக சட்டவாளர் தவராசாவின் வாய்மூலம் வெளிப்படுத்துகிறது. கே வி தவராசாவின் கை   இப்போது கூட்டமைப்புக்குள் ஓங்கி இருக்கிறது வெளியே  மக்கள் மத்தியிலும் செல்வாக்கு  உள்ள ஒரு நபர் -தேசியப்பட்டியலில் கடடயம் இவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய  கடடயம்  கூட்டமைப்புக்கு உரு வாகி உள்ளது 

அண்மைக் காலங்களில் சுமந்திரனின் பல அறிக்கைகளும் கூற்றுகளும் முன்னுக்குப் பின் முரணாகவும் உண்மைக்குப் புறம்பானதாகவும் அமைந்துள்ளன. கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி;.களில் ஒருவர்கூட சுமந்திரனுக்கு ஆதரவாக இயங்க முடியாத நிலை காணப்படுகிறது. 
சிலகாலம் விக்கியொடு போகலாமா என்ற  யோசனையில் மதில் மேல் பூனையாக  இருந்த ஸ்ரீதரன்  தவிர ஏனைய  அனவிவரும்  உட்பட  சுமந்திரனை  வாடி எடுத்துவிடடான .இப்போது சுமந்திரன் பிரச்சினை அவரது சொந்த கருத்துக்கள் என்று கூறி   நழுவி சுமந்திரனை  தோல்விக்கான  வைக்கும்  முயட்சியோ அல்லது  அவரது நடவடிக்கைகளால் கூட்டமைப்பில் உள்ள தமக்கு பாதகம்  வராமல் பார்க்க  ஒதுக்கி  வைக்கிறார்களோ  என என்ன தோன்றுகிறது 
   முன்னின்று  நடந்த கூட்டமைப்புக்கு ஓரளவு  செல்வாக்கு மீண்டும் கூடியுள்ளது  தெ ரிகிறது இருந்தாலும் கூட்டமைப்பு தங்கள்  சொல் கேட்கிறார்களில்லை அவர்களை இருத்தி எழுப்ப  வேண்டி  ஒரு மாற்று அணியாக  சைக்கிள் பாட்டியை முன்வைத்து வெளிநாட்டு புலிகள் அமைப்பு மல்லுக்கட்டி  நிற்றுகிறது அதட்கு வாய்ப்பாக  கொரோனா  நிவாரணத்தை  வெளிநாட்டு புலிகள்  சைக்கிள் பாட்டி ஊடாகவே  வழங்கி பலத்த  வரவேற்றபி   பெற வைத்துள்ளார்கள் அதோடு நிவாரணம் கொடுக்கும் சாட்டில் தங்களை  மக்களிடம் நன்கு அறிமுகமாகி  உள்ளார்கள்  ஆகவே    வீட்டுக்கு  இந்த முறை  பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிடைத்தாலும் கடந்த காலங்கள் போல எண்ணிக்கை அடிப்படையில் வீழ்ச்சி காணலாம் தேசியம் பேசும்   தமிழர் தரப்பில் மூன்று அணிகள் என்பதோடு   மாற்று கொள்கை உடைய  பெரும்பான்மை கட்சி ஆதர்வுகளில்  பல்வேறு அணிகள் வாக்குகளை சிதறடிக்க போகின்றன முக்கியமாக  ஐ தி க  குல இரண்டு அணி   இது  மகேஷ்வரன் துணைவியாரை  தோல்வி காண வாய்க்கு  கடந்த முறை  மிக  சொதப்ப  வாக்குகளால்  மீண்டவர்  மறுபுறம்  வீணை  வேறாக  கிடக்கிறது  மொட்டு  வேறு மைத்திரி அணி  என்ன  செய்கிறதோ மொத்தத்தில் அந்த பக்கம்  சிதறல் தான் விஜயகலா டக்ள அங்கஜன்   தனியே  வெல்வதே  கேள்விக்குறி . கூட்ட்டமைப்பு  மொத்த வாக்குகளை  அதிகம் பெற்று  தேசியப்பட்டியலில் குறி வைத்துள்ளது இப்போதைக்கு  கூடமமைப்புக்கு  நான்கு உறுதி ஐந்தாவதாகு சிலவேளை கிடைக்கலாம் ஆறாவது ஏழாவதுக்கு  சைக்கிளும் வீணையும் மீனும் போராடும் கஜனுக்கு  ஸீட்  உறுதி  ஆனால் கஜேந்திரன்  விக்கியார்  டக்ளஸ்  விஜயகலா  அங்கஜன் பாடு திண்டாட்டம் .  விக்கியார் பக்கம் உள்ளவங்க பலர்  இந்த தேர்தலோடு  முகவரி அற்றுப்போகலாம் டெலோ பிரிவு அணி  அனந்த அக்கா சிவாஜி அம்போ தான விக்கியார் பக்கம் நிதிப்பிரச்சினை  அனந்தி அக்கா  டெலோ பிரிவு எல்லாருக்கும் இதே  நிதி பிரச்சினை தான் 

ad

ad