புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 ஜூன், 2020

கூட்டமைப்பை பலவீனப்படுத்த உள்வீட்டு சதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னாரில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று மதியம் நடத்திய, ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா வைரசை சாட்டாக வைத்து வடக்கு, கிழக்கில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தென் பகுதியில் இவ்வாறான சோதனைச்சாவடிகள் இல்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிங்கள் மக்கள் மத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக, இனத் துவேச அடிப்படையில் அடக்குமுறையை சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டே சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற மற்றும் நம்பிக்கை அற்ற செயற்பாட்டை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே யாரை தெரிவு செய்ய வேண்டும்? யாரை தெரிவு செய்யக் கூடாது என்ற தீர்மானத்தை மக்களே எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.www.pungudutivuswiss.com