புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2020

புலிப்பேச்சு ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி கிடைக்கும் என்ற நோக்கு

புலிப்பேச்சு   ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி  கிடைக்கும் என்ற நோக்கு 

புலி புலி என்று  மூச்சுக்கு மூச்சு பேச்சு பேசிய  ஸ்ரீதரன்  பிரபல புலி எதிர்ப்பாளர்  சுமந்திரனின் அணியில்  முக்கிய பங்காற்றி வருவது  காரணத்தோடு தான் . சம்பந்தனின் காலம் விரைவில் முடிவுறும் அப்போது சுமந்திரனின்  கைக்கு  கூட்ட்டமைப்பு வரும் வந்தால்  தன்னை  இரட்ணடம் இடத்தில வைத்து அழகு பார்ப்பார் என்ற  தூர நோக்கில் செயல்படுவது  தெளிவாகியுள்ளது அண்மைய  பேச்சு . சுமந்திரனோடு  சேர்ந்துள்ளதால்  தோல்வி கண்டாலும் பரவாயில்லை என்று  அறிவித்துள்ளார்  அந்த  நோக்கில் தான் என புலப்படுகிராது  மக்கள்  சுமந்திரனை  தோல்விக்கான  வைப்பது உண்மையானால் ஸ்ரீதரனின்  கதி என்னாகும் .ஸ்ரீதரன் உச்சத்தில் கூட்டமைப்பு:தற்போதுவரை 3 அணிகள்?



சுமந்திரன்,சிறீதரன் ,சுரேந்திரன் மற்றும் தவேந்திரன் ஆகியோர் ஒரு அணியாகியுள்ளனர்.ஆயினும் தவேந்திரன் கறிவேப்பிலை என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

இன்னொரு புறம் மாவை சேனாதிராசா ,ஈ.சரவணபவன் மற்றொரு அணியாகியுள்ளனர்.

சித்தார்த்தன்,கஜதீபன் தரப்பு தனித்து ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதனிடையே சசிகலா ரவிராஜ்ஜினை சுமந்திரனின் பலியாடாக்க முயற்சிக்கப்பட்ட போதும் அவர் சுதாகரித்துக்கொண்டுள்ளார்.

சுமந்திரனிற்கான பலியாடாக அவர் மறுத்ததையடுத்து சயந்தன் தரப்புக்கள் அவரை வசைபாடத்தொடங்கியுள்ளன.

இதனிடையே தன்னை தீவிர புலி ஆதரவு செயற்பாட்டாளனாக காண்பித்துக்கொண்ட சிறீதரனின் நகர்வு பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.தனக்கு இலாபமின்றி செயற்பட மாட்டார்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிறீதரன் -சுமந்திரன் கூட்டு அனைத்து தரப்பினதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

இதனிடையே சுமந்திரனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்றுக்கொள்ள தயார் என சிறீதரன் அறிவித்துள்ளார்.

தென்மராட்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களிற்கும், தொகுதி கிளை உறுப்பினர்களிற்குமிடையிலான சந்திப்பில் இதனை தெரிவித்திருந்தார்.

தொகுதி கிளை தலைவர் கே.சயந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
“சிலர் சொல்கிறார்கள்- ஏன் சுமந்திரனுடன் செல்கிறீர்கள்? அவருடன் சென்றால் உங்களிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என. சுமந்திரனுடன் இணைந்த பிரச்சாரம் செய்வதால் மக்கள் என்னை தோற்கடிப்பார்களாக இருந்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன்“ என சிறிதரன் தெரிவித்துள்ளதாக சித்தார்த்தன் தரப்பு தகவல்களை கசியவிட்டுள்ளது

ad

ad