-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

20 ஜூன், 2020

முகமாலையில் இளைஞனை சுட்டுக் கொலை செய்த இராணுவம்: மக்கள் கொந்தளிப்பு, காவல்துறை குவிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்.மிருசுவில் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. தற்போது பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. எனினும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

விளம்பரம்