-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

15 ஜூன், 2020

தேர்தல் வியூகம் எப்படி அமைப்பது யாழில் கூடி ஆராய்ந்தது முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் அதற்கான பரப்புரைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுwww.pungudutivuswiss.com

விளம்பரம்