புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜூன், 2020

லண்டனில் காவல்துறையினர் மீது தாக்குதல்! 100 மேற்பட்டடோர்

கைதுலண்டனில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று சனிக்கிமை மத்திய லண்டனில் சிலைகளைஇனவெறிக்கு எதிரானவர்களிடம் இருந்து காப்பாற்ற எனக் கோரி ஆயிரத்திற்கு அதிகமான வலதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

போராட்டத்தின் போது, வலதுசாரி போராட்டக் காரர்கள் காவல்துறையினர் மீது கால்களைல் உதைந்தும் கைகளால் குத்தியும் வன்செயல்களில் ஈடுபட்டனர்.

வன்செயல் போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக்காரர்களில் 100க்கு மேற்பட்டடோர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் சனிக்கிழமையன்று தனித்தனியாக, லண்டன் மற்றும் நாடு முழுவதும் பல அமைதியான இனவெறி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
www.pungudutivuswiss.com