புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 ஜூலை, 2020

அங்கஜன் என்பவரின் தேர்தல் விதிமுறை -தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு

Jaffna Editor
அங்கஜன் என்பவரின் தேர்தல் விதிமுறை மீறல் அராஜகத்துக்கு எதிராக இன்று யாழ் மாவட்ட தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா சுதந்திர கட்சி மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர்களின் ( ராமநாதன் அங்கஜன் , மைத்திரிபால சிறிசேன ) உருவப்படங்கள் , கட்சியின் சின்னம் என்பன வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன . இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் . வேறெந்த கட்சிகளும் இவ்வாறான மீறலில் ஈடுபட்டதாக தகவல் இல்லை .

அதேபோன்று மக்கள் வரிப்பணத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக ஜனாதிபதியால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சப்ரிகம அபிவிருத்தி திட்டத்தினை தனது முயற்சியால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் போன்று வேட்பாளர் அங்கஜன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் தகவல்களை வெளியிட்டு வருகின்றமைக்கு எதிராகவும்

பாரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள மேற்படி வேட்பாளர்களின் உருவம் , கட்சி சின்னம் பொறித்த பதாகையினை மறைப்பதற்கோ அல்லது அகற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசுக்கட்சி வாலிபர் முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களால் இன்று யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .