புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2020

நாடாளுமன்றில் இன்று சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

Jaffna Editorஆளுங்கட்சியால் முன்மொழியப்படும் சபாநாயகரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று முன்தினம் மாலை கூடியது. இதன்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டன.

அவ்வேளையில் ஆளுங்கட்சிவசம் பெரும்பான்மை பலம் இருப்பதாலும், சபாநாயகர் என்பவர் பொதுவாக செயற்படவேண்டியவர் என்பதால் ஆரம்பத்திலேயே அவருக்கு எதிர்ப்பை வெளியிடமால் ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் பெயரை எதிர்ப்பின்றி வழிமொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபயவால் முன்வைக்கப்படும் கொள்கை விளக்க உரை மீது விவாதம் கோருவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ad

ad