புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2020

இரகசிய வாக்கு மூலம் ஊடகங்களுக்கு கசிந்தமை குறித்து சிறப்பு விசாரணை

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சாட்சியங்களினதும் சுருக்கத்தை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார முன்வைத்த ; கோரிக்கையை ஏற்று அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவத்தில் தற்கொலைதாரியாக செயற்பட்ட மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ் , தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், அந்த சம்பவத்தை மையப்படுத்திய நீதிவான் நீதிமன்ற விசாரணையின் கீழேயே ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் மன்றுக்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. அவரிடம் தடுப்புக் காவலில் தொடர்ந்து விசாரணை இடம்பெறுவதாக சி.ஐ.டி. சார்பில் அறிவிக்கப்பட்டது.

நேற்றைய வழக்கின் போது சி.ஐ.டி.யினர் சார்பில் பிரதான பெண் காவல் துறை பரிசோதகர் தீபானியுடன் பிரதான காவல் துறை பரிசோதகர் சுதத் குமார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், ரணலா சேனாதீர, சஞ்சீவ, ஹசான் நவரத்ன பண்டார ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த வரத்ன பண்டார ஆஜரானார்

இதன்போது மன்றுக்கு விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார,
' ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் பெரும் எண்ணிக்கையிலான வாக்கு மூலங்களை சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது. எனினும் ஓரிரு வாக்கு மூலங்களை மட்டுமே மன்றுக்கு ;முன்வைத்துள்ளனர்.

சாட்சியாளர்கள் ஓரிருவருக்கு வாக்கு மூலத்தை சொல்லிக்கொடுத்து அதனை நீதிவான் முன் ஒப்புவிக்கவும் சி.ஐ.டி. செயற்பட்டுள்ளது. நீதிவானுக்கு அளிக்கப்பட்ட இரகசிய வாக்கு மூலம் ஊடகங்களுக்கு கசிந்தமை இதனையே கடடுகின்றது.

சி.ஐ.டி. மன்றுக்கு சமர்ப்பிக்காமல் வைத்துள்ள அனைத்து சாட்சிகளையும் மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.' என கோரினார்.

இதனை ஆராய்ந்த நீதிவான் ; ரங்க திஸாநாயக்க, திறந்த மன்றில் அனைவருக்கும் நீதி சமமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியதுடன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் இதுவரை செய்யப்பட்ட விசாரணைகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சாட்சியங்களினதும் சுருக்கத்தை அடுத்த வழக்குத் தவணையில் மன்றில் சமர்ப்பிக்குமாரு சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார். அதன்படி அடுத்த வழக்குத் தவணை எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, நீதிமன்றுக்கு அளிக்கப்பட்ட இரகசிய வாக்கு மூலங்களில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என சிறப்பு விசாரணைகளை நடாத்துமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று வரை அவ்வுத்தரவு பிரகாரம் எதுவும் நடந்ததாக மன்றுக்கு தெரியவரவில்லை.

இந் நிலையில், குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம், இரு சிறுவர்கள் கடந்த மே 12 ஆம் திகதி, கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளதுடன், அதன் பின்னர் அவ்வாக்கு மூலம் சீல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பின்னணியில், அவ்வாக்கு மூலத்தில் கூறப்பட்டதாக தெரிவித்து சில விடயங்களை கடந்த மே 13 ஆம் திகதியன்று சில ஊடகங்களும், இரு தொலைக்காட்சிகளும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

அதனை கருத்தில் கொண்டே, இந் நிலைமையானது நீதிமன்றின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்த பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. அதனால் இது குறித்து உடன் விசாரணை தேவை. குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட இரகசிய வாக்கு மூலம் எவ்வாரு ஊடகங்களுக்கு சென்றன என விசாரணை நடாத்துமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல் துறை மா அதிபருக்கு மீண்டும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்

ad

ad