மஹிந்த யாப்பா அபேவர்தன, புதிய சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன்போது, சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டார்.
சபாநாயராக, மஹிந்த யாப்பா அபேவர்தனவை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.
அதனை, ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்த நிலையில், மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்
இதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய சபாநாயகர் தொடர்பில் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
அதனையடுத்து, புதிய சபாநாயகருக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்