புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2020

நவம் அறிவுக்கூடம் கொரோனா வைத்தியசாலையாகின்றது?

Jaffna Editor தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது.

இதனிடையே கிளிநொச்சியில் அமையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலையை அமைக்கும் பணிக்காக தற்போது கொரோனா தடுப்பு வைத்தியசாலைகளாக இயங்கும் வெலிகந்தை மற்றும் கரடியனாறு வைத்தியசாலைகளை மாவட்ட வைத்தியர்கள் குழு நேரில் சென்று ஆராய்ந்தனர்.


கிளிநொச்சி மாவட்டத்தின் கிருஸ்ணபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நவம் அறிவுக் கூடமாக இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது.

அதற்கேதுவாக பிற மாவட்டங்களில் தற்போது இயங்கும் வைத்தியசாலைகளை நேரில் பார்வையிட்டு அதனை ஒத்த வசதி வாய்ப்புக்கள் மற்றும் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே நேற்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து நான்கு வைத்தியர்கள் குழாம் கள ஆய்வை செய்துள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தின் வெலிகந்தை வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு வைத்தியசாலைக்கும் சென்று நிலமைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு அந்த வைத்தியசாலைகளில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முறமைகள் தொடர்பிலும் அறிந்து கொண்டனர்

ad

ad