2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார். அவரது உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு-
வரிக் கட்டமைப்பை எளிதாக்கும் விதமாக விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படும்.
அரச வரி வசூலை எளிதாக்க ஒன்லைன் அமைப்பை நிறுவுதல்.
அரச வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை தவிர மாதத்துக்கு ரூ.25 மில்லியனுக்கு அதிக வருமானத்தை பதிவு செய்யும் வர்த்தகங்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட 8% வரி மாற்றப்படாது.
பண்ணைகள், விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு.
தவறான வரி பதிவுகளை தயாரிக்கும் ஓடிட்டர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான சட்டம் அறிமுகப்படுத்தல்.
அரச வங்கிகளில் சமுர்த்தி வங்கிகளால் செய்யப்பட்ட 90% வைப்புத்தொகையை பயன்படுத்தி ஆண்டு வட்டிவீதம் 7 உடன் புதிய சமுர்த்தி நிறுவன மேம்பாட்டு கடன் திட்டம்.
பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் சிறப்பு திட்டங்களுக்கு ரூ.2500 மில்லியன் ஒதுக்கல்.
தரவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்து தொர்பாக புதிய சட்டம்.
தொழில்நுட் துறை விரிவாக்கத்திற்கு ரூ.8000 மில்லியன் ஒதுக்கல்.
காலி, குருநாகல், அநுராதபுரம், கண்டி, மட்டக்களப்பில் தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்தல்.
குழந்தை மகப்பேறு கிளினிக்குகள், ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.18,000 மில்லியன் ஒதுக்கல்.
குருகெதர கல்வி திட்டங்களை மாணவர்கள் பார்வையிட கிராமப்புற பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகள் வழங்கல்.
நேர்சிங் பாடசாலைகளை பட்டங்களை வழங்கும் கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தல்.
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.4000 வழங்கல். இதற்கு ரூ.3000 மில்லியன் ஒதுக்கல்.
ஓய்வு பெற்ற, காயமடைந்த, மரணித்த இராணுவ வீரர்களின் வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் முனைவோர் தேவைகளுக்காக ரூ.750 மில்லியன் ஒதுக்கல்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி, ஆசிய வங்கிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்கள் பெறப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துளைகளின் ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம்.
உள்ளூராட்சி மன்றங்களினால் அறவிடப்படும் வரிகள், கட்டணங்களை குறைக்க நடவடிக்கை.
ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பயன்பாடு ஜனவரி முதல் தடை செய்யப்படும்.
அரச துறையில் உள்ள ஆண்கள், பெண்கள் இருவரின் ஓய்வூதிய வயது 60 ஆக்கப்படும்”