புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2020

சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம் நடைமுறை : மீறினால் அபராதம்..!

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ‘Stick’Air’ கார் ஸ்டிக்கர் ஒட்டும் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காரில் ஸ்டிக்கர் ஒட்டமால் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார் எவ்வளவு மாசுபாட்டை வெளியிடுகிறது என்பதை குறிக்கும் ‘Stick’Air’ ஸ்டிக்கர் காரில் ஒட்டப்பட வேண்டும். மாசு அளவு அதிகமாகும்போது, அதிகமாக மாசுப்படுத்தும் கார்கள் நகர மையத்தில் ஓட தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய சட்டம் இப்போது ஜெனீவா நகரில் முழுவீச்சில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜெனீவாவில் அமல்படுத்தப்பட்டுள்ள விதிகள் பிரான்சில் அமலில் உள்ள இதேபோன்ற விதிகளை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தடை விதிக்கப்படுவதற்கான மாசுபாட்டின் அளவில் இரு நாடுகளிடையே வேறுபாடு உள்ளது.

கார் எங்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இப்போது ஜெனீவாவில் ஓடும் அனைத்து கார்களும் மாசுபடுத்தும் ஸ்டிக்கரைக் ஒட்ட வேண்டும் என்பது தெளிவாகிறது. பிரான்ஸ் ‘Crit’Air’ ஸ்டிக்கர் ஜெனீவாவிலும் செல்லுபடியாகும், ஆனால் ஜெனீவா "Stick’Air" ஸ்டிக்கர் பிரான்சில் செல்லுபடியாகாது

ad

ad