புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2020

சிவாஜி, சிறீகாந்தாவின் விலகல் எமக்கு பாதிப்பே-ஏற்றுக்கொண்டார் வினோ!

www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் எமது கட்சியை விட்டு கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதும் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதும் அது கட்சி செயற்பாட்டை மீறிய செயல் என்பதால் கட்சி அவர்களை விலக்கி வைத்தது அவர்களும் தாங்களாகவே கட்சியை விட்டு விலகிச் சென்று போட்டியிட்டார்கள் ஆதரவு தெரிவித்தார்கள் ஆகவே எங்களை பொறுத்தவரையில் அவர்கள் விலகல் என்பது எமக்கு பாதகம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டுள்ளார்

தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் அதிதிருப்தி அடைந்த நிலையில் ரெலோ கட்சியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் சிறிகாந்தா வெளியேறி தனியான கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள் உங்கள் கட்சியில் அவர்கள் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவ்வாறான நிலையில் அவர்களின் பிளவு உங்கள் கட்சியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது? என்ற கேள்விக்கு அவர் மேலும் பதில் அளிக்கையில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் எம் கட்சியிலிருந்து விலகிச் சென்றமை அல்லது விலக்கப்பட்டமை தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பொறுத்த வரையில் ஒரு பாரிய பின்னடைவைக் கொண்டுள்ளது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை சிரேஷ்ட உறுப்பினர்கள் அவர்கள் அரசியல் ரீதியான நல்ல அனுபவத்தையும் அறிவையும் கொண்டுள்ளவர்கள் அவர்கள் தற்போது கட்சியில் இல்லாமல் இருப்பது பாரியதொரு பாதிப்பு என்பதை நாங்கள் மறுக்கவில்லை

ஆனால் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருக்கின்ரார்கள் என்பதற்காக கட்சி உறுப்பினர்களுடைய பெரும்பான்மையான நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகவில்லை என்று சொன்னால் அதற்கு ஆதரவாக அவர்கள் செயற்படவில்லை என்றால் அவர்கள் கட்சியில் இருப்பதற்கும் அந்த கட்சி எடுக்கின்ற நிலைப்பாட்டு ரீதியாக அவர்கள் வேறு நிலைப்பாட்டை எடுக்கின்ற போதும்தான் முரண்பாடு ஏற்பட்டது
அதன் போதுதான் அவர்கள் கட்சியை விட்டு கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதும் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதும் அது கட்சி செயற்பாடுடை மீறிய செயல் என்பதால் கட்சி அவர்களை விலக்கி வைத்தது அவர்களும் தாங்களாகவே கட்சியை விட்டு விலகிச் சென்று போட்டியிடடார்கள்
ஆதரவு தெரிவித்தார்கள் ஆகவே எங்களை பொறுத்தவரையில் அவர்கள் விலகல் என்பது எமக்கு பாதகம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.


சிரேஷ்ட உறுப்பினர்கள் என்பதற்காக அவர்கள் தவறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு இருப்பதோ அதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவேதான் கட்சி தீர்மானித்தது யாராக இருந்தாலும் கட்சியினுடைய கொள்கை கட்சி சமகாலங்களில் எடுக்கின்ற நிலைப்பாட்டிற்கு எதிராக யார் செயற்பட்டாலும் சிரேஷ்ட உறுப்பினர்கள் கனிஷ்ட உறுப்பினர்கள் என்று பாரா பட்சம் பாராது எங்களுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.


அதன் காரணமாகத்தான் அவர்கள் வெளியேறிச் சென்று புதிய கட்சி ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள்
கட்சி பிளவடைந்து தமிழ் மக்களை பலவீனப் படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அவர்களுடைய செயற்பாடு இருக்கின்ற போது அவர்களின் சிரேஷ்டத்துவம் அனுபவம் எல்லாம் வீணடிக்கப்படுகின்றது அதே போல் அவர்களுடைய செயற்பாடானது மக்களால் நிராகரிக்கப்பட்டும் இருக்கின்றது எதிர் காலத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களது வெளியேற்றம் என்பது இன்னுமொரு கட்சியினூடாக கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக இருந்தால் அது வரவேற்கத் தக்கது ஆனால் அது தமிழ்தேசியக் கூட்டமைப்பயே சிதைக்கக் கூடியதாக இருந்தால் அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது அந்த வகையில் அவர்களுடைய நிலைப்பாடு எங்கள் கட்சியைப் பொறுத்த வரையில் ஜனாதிபதித் தேர்தல் விடயத்திலோ அல்லது எங்கள் கட்சியில் இருந்து விலகிச் சென்றது மகா தவறு என்றே கூற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

ad

ad