புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2020

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்! வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
லங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
 
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற கூடும். 
 
அது எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
 
இந்த கட்டமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைத் தீவின் வட கிழக்கு கடற்கரையை நாளை அடையும்.
 
கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றரை தாண்டி அடைமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேல், சப்ரமுகவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கிழக்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மணிக்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் ஏனைய பிரதேசங்களில் மணிக்கு 40 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ad

ad