புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2020

www.pungudutivuswiss.com
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துவருகின்றார் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து பொலிசாரினால்; ‘பி அறிக்கையின்’ பிரகாரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதனோடு இணைந்த வர்த்தமானி அறிவத்தல்கள், கொரோனா சுகாதார ஏற்பாடுகளை மீறாதவகையில் செயற்பட வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று திங்கட்கிழமை(23) மதியம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் தவிசாளருக்கு எதிராக, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் நாளில் பொதுக்கூட்டம் ஒன்றினை தவிசாளர் ஏற்பாடு செய்வதாக புலனாய்வுத்துறையின்; தகவல் தமக்குக் கிடைத்துள்ளதாக காவல் துறை   தரப்பில் இருந்து மன்றில் பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இவ் வழக்கில் சட்டத்தரணி வி.திருக்குமரன் தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகினர். சட்டத்தரணிகள் இன்று வரையில் தவிசாளர் அப்படியொரு பொதுக்கூட்டத்தினையும் ஏற்பாடுசெய்யவில்லை எனவாதிட்டனர். அதேவேளை ஏதாவது ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்வதாயின் சட்டதிற்கு உட்பட்டு சுகாதார அனுமதிகளுடனேயே மேற்கெற்கொள்ளப்படும் எனவும் மன்றில் உத்தரவாதமளிக்கப்பட்டது.

இந்த இடத்தில் பொலிசாரினால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காவல் துறையால் குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரும்   குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்பதை நீதிபதி தெரிவித்ததுடன்; முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் பயங்கரவாதம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் நீதிமன்றின் உத்தரவைப் பெறாமலேயே கைது செய்ய பொலிசாருக்கு முடியும் எனவும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் வர்த்தமானி அறிவித்தல்கள், கொரோனா தொடர்பான சட்ட ஏற்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அடுத்த தவணையில் குற்றச்சாட்டப்பட்டவரின் செயற்பாடு பற்றி காவல் துறையினரும்  அறிக்கை சமர்ப்பிக்கவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் தடை உத்தரவு ஒன்றினைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நாளை செவ்வாய்கிழமை தாக்கல் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ad

ad