புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2020

யாழ் மாவட்டத்தில்ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார்- மாவட்ட அரசாங்க அதிபர்

www.pungudutivuswiss.comயாழ்.மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருதால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது தாழமுக்கம் காரணமாக விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் இன்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…..

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல் ஒன்று கிடைத்திருக்கின்றது இன்று தொடக்கம் 24, 25 ஆம் திகதி வரை அவதானமாக மீனவர்களை கடலுக்குச் செல்லும் படியும் அதே நேரத்தில் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறகூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 24 ஆம்,25 ஆம் திகதிகளில் 100-150 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும். கடும் காற்று வீசும் எனவும் வடக்கு மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம். அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய அறிவுறுத்தலையும் வளிமண்டல திணைக்களத்தினுடைய அறிவுறுத்தலையும் பின்பற்றி தங்களுடைய கடற் தொழில் செயற்பாடுகளை செயற்படுத்தப்படுத்தல் வேண்டும்.

குறிப்பாக நெடுந்தீவுக்கான கடல் பயணமும் கடல் குழப்பம்,கடும் காற்றின் காரணமாக தடைப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் படகுப் போக்குவரத்தினை நிலமையினை அனுசரித்து செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு கடற் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வட பகுதியில் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் வடக்கில் கரையோரப் பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் அத்தோடு தங்களுடைய பிரதேசத்தில் ஏதாவது அர்த்தம் ஏற்படுமாயின் உடனடியாக அனர்த்தமுகாமைத்துவ பிரிவினரை தொடர்பு கொள்வதன் மூலம் அதற்குரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்னெடுக்கும்.

மேலும் இன்று பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன பாடசாலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் வகுப்பறையில் மாணவர்கள் பேண வேண்டிய சுகாதார நடைமுறை விடயங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் விரிவான நடைமுறை வழிகாட்டல்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி வகுப்பறையில் மாணவர்களை 50 சதவீதமான அளவுக்கு அனுமதித்து பாடசாலை கல்வியை தொடரமுடியும் அதேபோல மாணவர்களுடைய போக்குவரத்து மற்றும் இதர விடயங்களில் அவதானமாக இருக்கும் படியும் அவர் கோரப்பட்டுள்ளது.

எனவே அதனைப் பின்பற்றி பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடரமுடியும் அதேபோல் இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கள் வழமைபோல் இடம்பெறுகின்றது மக்கள் அவசியமற்ற அநாவசிய மற்ற பயணங்களை தவிர்த்துகொள்ள வேண்டும் சுகாதார நடைமுறைகளையும் சமூக இடைவெளி, முககவசம் போன்றவற்றையும் கவனத்தில் எடுத்தல் அவசியமாகும்.

யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பு பொதுமக்களின் கைகளில்தான் இருக்கின்றது சுகாதார பிரிவினரால் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என சோதிக்க மட்டுமே முடியும் எனவே பொதுமக்கள் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

யாழ் மாவட்டத்தில் இன்றைய நிலையில் 446 குடும்பங்களைச் சேர்ந்த 910 வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் குறிப்பாக முடக்கப்பட்ட மேல்மாகாண பிரதேசத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மழை பெய்ய தொடங்கி யுள்ளதன் காரணமாக டெங்கு அபாயம் சற்று அதிகரித்து காணப்படுகின்றது நேற்று ஒருவர் டெங்கினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இனி மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் காரணமாக நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி மற்றும் பொதுமக்கள் நுளம்பு பரவல் ஏற்படாவண்ணம் தங்களையும் சூழலையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று அச்ச நிலைமையில் டெங்கு விடயத்தினையும் பொதுமக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

ad

ad