புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2020

வவுனியாவில் மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

www.pungudutivuswiss.com
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை (04) மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் (வயது 18) என்ற மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த 4 ஆம் திகதி மதியம் அங்கு சென்றிருந்தார். இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி மாணவனை நீண்ட நேரம் தேடியும் கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், காணாமல் போன மாணவனை நேற்றும் (05) எட்டு மணி தொடக்கம் கடற்படையினர், இராணுவம் மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தேடிய போதும் கண்டு பிடிக்கவில்லை.

இன்றைய தினம் (06) காலை மீண்டும் இளைஞர்கள் நீர் ஒடும் பகுதியில் தேடுதல் நடத்திய போது கல் ஒன்றில் அகப்பட்டு இருந்த நிலையில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

ad

ad