புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2020

அலி ஷாஹிர் மௌலானா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகல்!

www.pungudutivuswiss.com
நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் கட்டாய தகனங்களை நிறுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் முஸ்லிம்கள் இன்று துன்புறுத்தப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குள் உள்ளவர்கள் தமது தனிப்பட்ட விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

நாடு மற்றும் சமூகம் தொடர்பான அக்கறை அவர்கள் மனங்களில் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸின் சில உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக “வெட்கமின்றி, துணிச்சலுடன்” வாக்களித்ததாகவும் மௌலானா தெரிவித்துள்ளார்.

இந்தச் செயல் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைகளையும் முன்னேற்றத்தையும் சிதறடித்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி உறுப்பினர்களின் போலி, ஏமாற்றும் மற்றும் ஆபத்தான நடத்தை குறித்து நான் தனிப்பட்ட முறையில் வெறுப்படைந்தேன், வெட்கப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் 20வது திருத்தம் குறித்து காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் அளித்ததைக் கேட்டு திகைத்துப் போனதாகவும் அலி ஷாகிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ad

ad