புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2020

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் விடை பெற்றார் என்ற செய்தி … அவர் இடத்தை இனி யார் நிரப்புவார்கள் ?

www.pungudutivuswiss.com
மூத்த ஒலிபரப்பாளரும்,எழுத்தாளரும்.அற்புதமான கலைஞரும் நேர்முக வர்ணனையாளருமான அப்த்துல் ஜபார் அவர்கள் விடைபெற்றார் என்பது மிகுந்த வேதனை தரும் விடையமாக உள்ளது. அவரை பலர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என்று அழைப்பார்கள்.

தேசிய தலைவர் ஜபாரை அழைத்து, பேசிய காலமும் உண்டு. தமிழ் தேசியம் தொடர்பாகவும். விடுதலை தொடர்பாகவும் அப்துல் ஜபாருக்கு ஒரு தீர்க்கமான பார்வை உண்டு. முஸ்லீம்கள் என்றாலும் தாய் மொழி இனம் என்று வரும்போது, நாம் தமிழர்களே என்று அடித்து கூறிவந்தார் ஜபார். போராட்ட காலங்களில் அதற்கு உதவியாக நின்று ஊடகப் பணி ஆற்றியவர்.

மேலும் சொல்லப் போனால், அரசியல் விமர்சகராக பல காலம் பணி ஆற்றியவர்.. அன்னாரின் மறைவு ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு பெரும் இழப்பாகும். ஆத்தம் சாந்திக்கு நாமும் பிரார்த்திப்போமாக

ad

ad