புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2020

ஊடகவியலாளர் விமர்சகர் வர்ணனையாளர் அப்துல்  ஜப்பார் 
இந்த நூற்றாண்டின்  முக சிறந்த  துல்லியமான கணித தரவு  நினைவு படை த்த  கிரிக்கட்  வர்ணனையாளர்    என்றாலே  சாலப்பொருந்தும்   ஒருவர் . அத்தோடு  அரசியல்  செய்தி  ஊடகத்துறையில்   உன்னதமானவர் தமிழக  இந்திய அரசியல்  விமர்சனங்களை  ஆக்கங்களை  நகைச்சுவையோடு   விலாவாரியாக சொல்லி சிறப்பிபதில் உயர்ந்தவர் . விளையாட்டுத்துறையில்  முக்கியமாக  கிறிக்கட்  வரலாறு  சாதனைகள்  பந்து வீச்ஸின் நுட்பம்  துடுப்பாடத்தில்  வல்லமை என   அடுக்கி கொண்டே  போவதில் அவருக்கு நிகர் அவரே .ஈழப்போராடட வரலாற்றிலும்   பல  பங்கினை  வகித்தவர்  மறைமுகவாகவும் நேரடியாகவும் இவர்  பல  தருணங்களில் நுழைந்திருக்கிறார் முக்கியமாக  முஸ்லீம் தமிழரும்  மற்றைய தமிழரும் ஒரு தாய்    பார்க்கப்படவேண்டும் என்பதில்  இடித்துரைத்தவர் ஐ பி சி தமிழ் இல் நான் ஒலி பரப்பாளராகவும் சுவிஸ்  பொறுப்பாளராகவும் இருந்த  ஆரம்ப காலத்தில் நடந்த உலக கிண்ண  கிரிக்கட்  போட்டியின் பொது  நேரடியாக  ஐ பி சி  லண்டன் தலைமையகத்துக்கு வந்திருந்து  சுமார்  20  நாட்களாக   ஒளிபரப்பில் இணைந்து சிறப்பித்தவர்  அந்த வேளைகளில்   தினமும்  என்னோடும்  லண்டன்  சன்  ஜோன்சனுடனும்  இணைத்து  நேரடி வர்ணனைகளை   சுவை பட  வழங்கி எம்மையும் ஊக்குவித்து தட்டி கொடுத்தவர்  ஈழத்து தமிழில் செய்த  எமது  வர்ணனைகள் விமர்சனங்களை பாராட்டி சென்றவர் இவரை போன்ற  ஆற்றல் படைத்தவர்கள் எங்காவது  ஓரிருவர்  தான்  தோன்றுவர்  அன்னா ரின்  புகழ் என்றும் ஓங்கி  நிற்கும் 

ad

ad