புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2020

கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்- அச்சத்தில் வடக்கு மக்கள்

www.pungudutivuswiss.com

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்

கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது.

மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.

மேலும் மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது.இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக இன்று புதன் கிழமை காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்சியான மழை நீடித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளனர்.

தொடர்சியாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதுடன் கடலை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் நுழைத்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்தமானது புரவி புயலாக மாற்றமடைந்துள்ளது. இதனால் வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் 100 கிலோ மீற்றர் வீசுவதுடன் இன்று மாலை 5 மணியின் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து வவுனியாவை ஊடறுத்து மன்னாரை நோக்கிச் செல்லவுள்ளது .

இக்காலப்பகுதியில் தாழ் நிலப்பகுதிகளிலுள்ளவர்கள் , தற்காலிக வீடுகளில் தங்கியுள்ளவர்கள் , மரங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் இதன்போது மழை வீழ்ச்சியானது 150 மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்று இரவாகும் போது வவுனியாவிருந்து மன்னாரை நோக்கி இப்புயல் செல்லவுள்ளது இன்றைய இரவுப் பொழுது மிகவும் அவதானத்துடன் இருக்கவும் , இடி மின்னல் தாக்கத்தின்போது மின்சார உபகரணங்களை நிறுத்தி வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானதாகும் என்று வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலைய அவதானிப்பாளர் த.சதானந்தம் தெரிவித்துள்ளார் .

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது.

மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.

மேலும் மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது.இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக இன்று புதன் கிழமை காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்சியான மழை நீடித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளனர்.

தொடர்சியாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதுடன் கடலை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் நுழைத்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்தமானது புரவி புயலாக மாற்றமடைந்துள்ளது. இதனால் வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் 100 கிலோ மீற்றர் வீசுவதுடன் இன்று மாலை 5 மணியின் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து வவுனியாவை ஊடறுத்து மன்னாரை நோக்கிச் செல்லவுள்ளது .

இக்காலப்பகுதியில் தாழ் நிலப்பகுதிகளிலுள்ளவர்கள் , தற்காலிக வீடுகளில் தங்கியுள்ளவர்கள் , மரங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் இதன்போது மழை வீழ்ச்சியானது 150 மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்று இரவாகும் போது வவுனியாவிருந்து மன்னாரை நோக்கி இப்புயல் செல்லவுள்ளது இன்றைய இரவுப் பொழுது மிகவும் அவதானத்துடன் இருக்கவும் , இடி மின்னல் தாக்கத்தின்போது மின்சார உபகரணங்களை நிறுத்தி வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானதாகும் என்று வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலைய அவதானிப்பாளர் த.சதானந்தம் தெரிவித்துள்ளார் .

இதேவேளை தீயணைப்பு பிரிவு, நோயாளர் காவு வண்டி, நகரசபை தொழிலாளர்கள் என அனைத்து பிரிவும் தயார் நிலையில் உள்ளது. மக்கள் தமது பகுதிகளில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் விசேட இலக்கமான 024-2225555 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உதவியை பெற்றுக்கொள்ள முடியும் வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

ad

ad