புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2020

சூறாவளி இன்று இரவு 07.00 மணியளவில் நாட்டை கடக்கும் _ "வளிமண்டலவியல் திணைக்களம்"

www.pungudutivuswiss.com
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 07.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை / இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான லத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80 - 90 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது

ad

ad