புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2020

இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்கள் - விசாரணைகளைத் தொடங்கியது பிரித்தானிய பொலிஸ்!

www.pungudutivuswiss.com
இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படையினருடன், தொடர்புபட்ட போர்க்குற்றங்கள் குறித்து பிரித்தானியாவின் பெருநகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

இலங்கையில் தனிநாடு கோரி போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்காக, 1980 களில் விசேட அதிரடிப்படை என்று அழைக்கப்படும் இலங்கை காவல்துறையின் ஒரு உயர் படைப் பிரிவுக்கு, பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேவை ( Private security company Keenie Meenie Services (KMS) பயிற்சி அளித்தது.

இந்த விசேட அதிரடிப்படை STF பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், விசாரணையின்றி மரணதண்டனைகளை வழங்கியதாகவும், தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது உள்ளிட்ட குற்றங்களும் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த நிலையில் போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரித்தானியாவின் முக்கிய காவற்துறைப்பிரிவான பெருநகர காவற்துறையால் (Metropolitan Police) பிரித்தானிய கூலிப்படையினர் மீது விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.

பிரித்தானிய கூலிப்படையினரால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மார்ச் மாதத்தில் மெட் ஒரு பரிந்துரையைப் பெற்றதாகவும், அது குறித்த கண்டறிதல் முயற்சிகளைத் (scoping exercise), தொடர்ந்து, அது ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் காவற்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எஸ்ஏஎஸ் அதிகாரியான டேவிட் வாக்கரால் (David Walke) கே.எம்.எஸ் நிறுவப்பட்டது. கே.எம்.எஸ் என்ற தனியார் படை தற்பொது இல்லை, ஆனாலும் கென்சிங்டனைத் தளமாகக் கொண்ட சலாடின் செக்யூரிட்டி (Saladin Security, which is based in Kensington.) என்ற அதன் துணை நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக 78 வயதான டேவிட் வோக்கர் (David Walke) விளங்குகிறார் என பில் மில்லர் குறிப்பிட்டள்ளார்.

எனினும் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு கே.எம்.எஸ்ஸைச் (KMS) சேர்ந்த எவரும் உடந்தையாக இருக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் டேவிட் வோக்கர் (David Walke) உறுதியாக உள்ளார்.

இது குறித்து டேவிட் வோக்கரின் பிரதிநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், “1980 களின் நடுப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு டேவிட் வாக்கர் அல்லது கே.எம்.எஸ் லிமிடெட் (KMS Ltd) ஊழியர்கள் உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டுகள் திட்டவட்டமாக மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

“சலாடின் செக்யூரிட்டி (Saladin Security) கே.எம்.எஸ்ஸிலிருந்து (KMS) முற்றிலும் தனித்துவமான நிறுவனம் அத்துடன் இலங்கையில் அதற்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை. டேவிட் வோக்கர் அதில் ஒரு பங்குதாரராகவோ அல்லது கே.எம்.எஸ்ன் இயக்குநராகவோ இருக்கவில்லை.

“போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவு இதுவரை சலாடின் செக்யூரிட்டி அமைப்பிடம் இருந்தோ அல்லது டேவிட் வோக்கரிடமிருந்து உதவிகள் எதனையும் கேட்கவில்லை, ஆனால் அவர்கள் கேட்டால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் மகிழ்ச்சியடைவோம்.” என டேவிட் வோக்கரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ad

ad