புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2020

போர்முலா 1 கார் பந்தயம் :பிரித்தானிய வீரர் ஹெமில்டன் வெற்றி

www.pungudutivuswiss.com

இந்த ஆண்டுக்கான போர்முலா 1(Formula-1 ) கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15ஆது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கடந்த சுற்றிலேயே உலக சம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்து விட்ட பிரித்தானிய வீரர் லீவிஸ் ஹெமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 59 நிமிடம் 47.515   செக்கன்களில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

இந்த சீசனில் அவர் பெற்ற 11ஆவது வெற்றி இதுவாகும். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1.254 வினாடி பின்தங்கி 2ஆவது இடத்தையும், தாய்லாந்து வீரர் அலெக்சாண்டர் அல்பான் (ரெட்புல் அணி) 8.005 வினாடி பின்தங்கி 3ஆவது இடத்தையும் பெற்றனர்.

இதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் ஹெமில்டன் 332 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 201 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 189 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 6ஆம் திகதி பக்ரைனில் நடைபெறவுள்ளது.

ad

ad