புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2021

அதிகபட்சமாக 30 இடங்கள் தான் தர முடியும்- டெல்லியில் முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

www.pungudutivuswiss.com
பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சம் 30 தொகுதிகள்தான் தர முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்திக்க நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் முதலில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, அரசு மற்றும் அரசியல் குறித்து சுமார் ஒன்றைரை மணி நேரம் பேசியதாக தெரிகிறது. மேலும் தமிழக சட்டசபை தேர்தல் நிலவரம், தொகுதி பங்கீடு, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலைவர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பது கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கும் என முதல்வர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.

அதிகபட்சம் 30 தொகுதிகள்:

தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரையில் பாஜக கேட்கின்றன 60 தொகுதிகளை நிச்சயம் தர இயலாது என்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் பதிலாம். அதிகபட்சமாக 30 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க முடியும், அப்படியே 30 தொகுதிகள் ஒதுக்கினாலும் பாமக, தேமுதிக கட்சிகளும் கணிசமான இடங்களைக் கேட்க வாய்ப்பிருக்கிறது.

அதனால் அதிமுக குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலை உருவாகும் என்கிற கவலையும் தெரிவிக்கப்பட்டதாம்

ad

ad