புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2021

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை மீண்டும் சிறீலங்கா காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த முயற்சி!

www.pungudutivuswiss.com

மண்டைதீவில் பொதுமக்களது காணிகளை

மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் கையகப்படுத்த இலங்கை அரசு முற்பட்டமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் கடற்படை முகாம் விஸ்தரிப்பிற்கு காணிகளை சுவீகரிக்க அளவீட்டு பணிகளிற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயினும் மக்களது கடும் எதிர்ப்பினையடுத்து தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் காவல்துறை குவிக்கப்பட்டு அளவீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதுவும் பின்னராக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பாதுகாப்பு, புலனாய்வுத்துறை, மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அறிவுறுத்தல்களை அடுத்தே நினைவுத்தூபியை இடித்தழிக்க தான் உத்தரவிட்டதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

எனினும் பின்னர் நிலைமையை சுமுகமாக்குமாறு அதிகாரதரப்பு தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் வெளிநாடுகளில் எதிர்வினைகள் குறிப்பாக தமிழகம் கொந்தளிப்பதாகவும் தெரிவித்தார்.

புனரமைக்கப்படவுள்ள நினைவுத்தூபி போரை விடவும் சமாதானத்தை வெளிப்படுத்தும் எனக்கூறிய துணைவேந்தர், நினைவுத்தூபியை மீள அமைப்பது தொடர்பில் ஆராய மாணவர் ஒன்றியம் உட்பட ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாராம்.

ad

ad