புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2021

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா...

www.pungudutivuswiss.com
அமெரிக்காவில் கலக்கும் கோலங்கள்!தற்போது அமெரிக்காவில் கோலாகலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வருடம் எல்லாம் கோலம் போட்டாலும், கோலத்தை கொண்டாடுவதற்கான மாதம், மார்கழி. வழக்கம்போல இந்த மார்கழியிலும் பலரின் வாசல்களை விதவிதமான கோலங்கள் அலங்கரித்தன. இப்போது நம் கோலங்கள் அமெரிக்க வீதிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் வைரல் செய்தி.

தமிழர்களின் பாரம்பர்ய அடையாளங்களில் ஒன்று, கோலம். வாசலை நிறைத்து, தெருவை அடைத்து என்று கோலம் போடுவதெல்லாம் நம் பெண்களின் விரல்களுக்குப் பிடித்த கலை
அப்படிப்பட்ட நம்முடைய பாரம்பர்ய கோலக் கலை, தற்போது அமெரிக்காவில் கோலாகலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆம், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் பதவியேற்பு விழாவின் மெய்நிகர் துவக்க விழாக்களின் ஒரு பகுதியாகியுள்ளது, கோலம். இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் ஆன்லைன் முயற்சியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 1,800 க்கும் மேற்பட்ட நபர்களும் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றனர்.

மேரிலாந்தைச் சேர்ந்த விருது பெற்ற மல்டிமீடியா மற்றும் பலதுறை கலைஞரான சாந்தி சந்திரசேகர், "கோலங்கள் நேர்மறை ஆற்றலையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களுடன் இவற்றை தங்கள் வீடுகளிலிருந்து உருவாக்க பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அனைத்து வயதினரும் ஒத்துழைத்தனர். இந்தப் பணி எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு சென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார். பதவியேற்பு விழாவில் கோலத்தை ஓர் அங்கமாக்கும் முயற்சியைத் துவக்கி வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு விழாவிற்கு அனுப்பப்பட்ட கோலங்கள்
பதவியேற்பு விழாவிற்கு அனுப்பப்பட்ட கோலங்கள்
Photo: Twitter / IndiasporaForum
இந்த வரவேற்பு விழா கோலங்களை வெள்ளை மாளிகையின்(White House) முன் வெளிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. இதையடுத்து கேபிடல் ஹில் அருகே, பதவியேற்பு விழா நிகழ்வு நடக்கும் இடத்தைச் சுற்றி கோலங்கள் உள்ள ஓடுகளை(tiles) வைக்க அனுமதிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.


இதையடுத்து, 'பைடன் மற்றும் ஹாரிஸை ‘அனைவருக்குமான அதிபர்’ என்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த கலாசார பாரம்பர்யத்தை வெளிப்படுத்தவும், சனிக்கிழமையன்று கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு வீடியோவாக எடுக்கப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது.

கலிஃபோர்னியா, பாஸ்டன், நியூ ஜெர்சி மற்றும் பல இடங்களிலிருந்து மக்கள் தங்கள் கோலங்களின் ஓடுகளை அனுப்பியுள்ளனர். குழந்தைகள் முதல் 90 வயது முதியவர்கள் வரை பலரும் இதில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன அமெரிக்காவில் கலக்கிய இந்திய கோலங்கள்!

ad

ad