புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2021

இலங்கைபெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா

www.pungudutivuswiss.com
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் சமுர்த்தி, மனை பொருளாதார நுண்நிதி சுய தொழில் மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மிலேனியம் கோப்பரேஷன்(எம்.சி.சி) உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவுடனான எம்.சி. சி ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.

நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

எம் .சி .சி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இரகசியமான முறையில் கைச்சாத்திட கடந்த அரசாங்கம் முயற்சித்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து ஆராய ஜனாதிபதி கடத்த வருடம் டிசம்பர் மாதம் துறைசார் நிபுணர் குழுவை நியமித்தார். குழுவின் அறிக்கை மும்மொழியிலும் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.

நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அறிக்கையின் பிரகாரம் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 480 மில்லியன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் நிதிக்காக நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு, சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றார்.

Tags :

ad

ad