புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2021

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய மற்றொரு குழு

www.pungudutivuswiss.com
இலங்கையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுப் பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதியால அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு மாதத்தில் ஜனாதிபதிக்கு குறித்த குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad