புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2021

நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பு -தமிழக முதல்வர் கடும் கண்டனம்

www.pungudutivuswiss.com
நெடுந்தீவு கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படையின் படகுடன் மோதியதில் இந்திய மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய விபத்தில் மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், அரசு விதிகளுக்கு உட்பட்டு, தகுதியின் அடிப்படையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா கடற்படைதான் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் படகு மீது மோதியதாகவும், அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளி யைச்சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad