புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2021

வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிரான குற்றப்பத்திரம் நிராகரிப்பு

www.pungudutivuswiss.com
வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என தெரிவித்து கடந்த 22 ஆம் திகதிய வழக்கில் ஆஜராகியிருந்த பூசகர் உட்பட்ட மூவரையும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டிருந்தார்.
வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என தெரிவித்து கடந்த 22 ஆம் திகதிய வழக்கில் ஆஜராகியிருந்த பூசகர் உட்பட்ட மூவரையும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டிருந்தார்.
குறித்த வழங்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார். குறித்த வழக்கின் பின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சம்மந்தமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். இன்றையதினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கானது ஆரம்பத்திலே குற்றவியல் சட்ட கோவையின் 106 ஆவது பிரிவின் கீழே பொதுமக்களுக்கு இடையூறு செய்வதான வழக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஒரு சான்றிதழ் கொடுத்திருந்தார்.
இவ்விடயமானது ஒரு தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடம் என்று தொல்லியல் கட்டளை சட்டத்தின் 15 டி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டதன் காரணமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் சென்ற தடவை நீதிமன்றத்துக்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பிடியானை இருந்தது என தெரிவித்து இன்று வரை மூவரும் விளக்கமறியலிலே இருந்தார்கள். அதற்கு முன்னர் குறித்த மூவரும் பிணையிலே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள்.
இன்றைய வழக்கில் பொலிசார் சார்பில் குற்றப்பத்திரிகை ஒன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. இதன் போது தொல்லியல் பொருட்களை சேதமாக்கினார்கள் என்ற ரீதியிலும், தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழே ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால் அவருக்கு பிணை வழங்க முடியாது என்பது அனைவருக்கு தெரிந்த விடயம். குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அல்லது சந்தேக நபர்களுக்கு கையளிக்கப்படுவதை நாங்கள் எதிர்த்து வாதிட்டோம்.
ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வழக்கு தொடுனர் அல்ல. வழக்கு தொடுனர் அதனை வரைந்து நீதிமன்றத்துக்கு கொடுத்தால் கூட அதன் முழுப்பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். நீதவான் அவ்வாறு ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருந்தால் மாத்திரமே அந்த குற்றப்பத்திரத்தை கையொப்பம் இட்டு அவருக்கு வழங்குவார்.
ஆனால் இந்த வழக்கிலே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நாங்கள் மன்றுக்கு தெரிவித்திருந்தோம். அதுமட்டுமன்றி சேதம் விளைவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற மரத்தினாலான ஏணியை அகற்றி இரும்பினாலான ஏணியை வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இங்கே தொல்பொருள்மிக்கதான மலையை சேதப்படுத்தியது அன்றி மரத்தாலான ஏணியை அப்புறப்படுத்தி விட்டு இரும்பிலான ஏணியை உருவாக்கினார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது.
ஆனால் மரத்தாலான ஏணிக்கு பதிலாக இரும்பாலான ஏணியை செய்வதற்கு 2018ம் ஆண்டில் இருந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை பிரயோகிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது மட்டுமல்லாது அவ்விடயத்தை விரைவாக செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இது சம்மந்தமான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க காலத்தில் பிரதம அலுவலகத்தில் இருந்து இந்த ஆலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் அறிவுறுத்தல் வழங்கிய கடிதமும் உள்ளது. ஆகவே இந்த ஆவணங்களை எல்லாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த போது நீதிமன்றம் அவற்றை பார்வையிட்டு வழக்கு எப்படியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த குறிப்பிடப்பட்ட மரத்திலான ஏணிக்கு யார் சேதத்தை விளைவித்தார்கள் என்பதில் தெளிவில்லை என்றும், கொடுக்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் அரசாங்கமே இதனை திருத்தி அமைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது என்பதில் புலனாகுவதன் காரணமாகவும், யார் எவ்வாறான சேதங்களை விளைவித்தார்கள் என்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலே, ஆலய நிர்வாக சபையினர் என்ற காரணத்தினால் மாத்திரம் அவர்களுக்கு எதிராக இவ்வாறான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் சமர்ப்பிக்க முடியாது என்றும், ஆகவே தொடர்ச்சியாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறும் இது அரச அதிகாரிகள் செய்திருந்தாலும் கூட யார் செய்திருந்தார்கள் என்பதனை நீதிமன்றத்திற்கு சரியாக அறிக்கையிடுமாறும். தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் இந்த விபரங்கள் கொடுக்கப்படாத காரணத்தினால் குற்றவியல் சட்டக்கோவை 102இன் கீழ் நீதவானுக்கு குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று தீர்மானித்து குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கினை தொடர்ந்து புலன்விசாரணை செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் தொடர்ந்தும் அதே நிபந்தனையில் நிற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை வழக்கு நீண்ட திகதி இடப்பட்டு மே மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது ஒரு வழிபாடு சுதந்திரம் தொடர்புடைய விடயம். நீதிமன்றத்திலே நான் சமர்ப்பணங்களை செய்கின்ற போது அரசியல் அமைப்பு 14ம் 01இ கீழ் பூரண சுதந்திரம் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டினேன்.
தொல்லியல் பெறுமதிமிக்க இடமாக இருந்தாலும் அது ஒரு வழிபாட்டு ஸ்தலமாக இருந்தால் அங்கே வழிபடுவர்கள் செல்வதற்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது. இல்லை என்றால் எவரும் ருவண்வெலிசாயாவுக்கு போக முடியாது. ஸ்ரீமாபோதிக்கு போக முடியாது, பொலனறுவையில் இருக்கின்ற எந்த புராதான இடங்களிற்கும் போக முடியாது. வழிபடவும் போக முடியாது. ஆகையினால் புராதன இடமாக இருந்தாலும் கூட அது வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற சமர்ப்பணத்தை செய்திருந்தேன்.
அடிப்படை உரிமையை தடுக்கிறதான இந்த செயற்பாட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்த கிழமை தயாரான நிலையில் குறித்த வழக்கு குறுக்கிட்டதன் காரணமாக இந்த வழக்கு விடயங்களையும் அதிலே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அது தாமதமாகியிருப்பதாக நீதிமன்றத்திலே நான் சொல்லியிருக்கிறேன்.
அந்த ஆவணங்கள் தயாராக இருக்கின்றன. இந்த நீதிமன்றத்தின் கட்டளையையும், வழக்கு நடவடிக்கை கோவை முழுவதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி கிடைத்த பின்னர் அதையும் இணைத்து ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கின்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கை உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டு இங்கே வழிபடுவதற்கு தடையேற்படுத்தக்கூடாது என்ற நிவாரணத்தை பெற்றுக்கொடுப்போம்.
இன்றைய நீதிவானுடைய முடிவு எங்களுக்கு பெரும் ஆறுதலைக்கொடுக்கின்றது. ஏனென்றால் தொல்லியல் கட்டளைச்சட்டத்தை தவறாக பிரயோகித்து அதன் கீழே பிணை கொடுக்க முடியாது என்கின்ற ஏற்பாட்டை காரணமாக வைத்து எங்களது பாராம்பரிய வழிபாட்டு தலங்களை முடக்குவதும் அதற்கு பாதகம் விளைவிக்கின்ற இந்த அரசின் செயற்பாட்டிற்கு அதற்கு எதிரான முதற்படியான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆகவே ஆலய நிர்வாகத்தினர் சுதந்திரமாக நடமாட முடியும். அதுதான் எங்களது பிரதான நோக்கமாக இருந்தது. அதிலே நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஆதிலிங்கேஸ்வரர் விடயத்திலே வழிபட விரும்புபவர்கள் எவரும் வழிபடக்கூடிய வகையிலே சட்டத்தின் துணையோடு அதனை உறுதி செய்வோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்

ad

ad