புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2021

புதிய திட்டத்தை அறிவிக்கவிருக்கும் பிரித்தானிய அரசாங்கம்

www.pungudutivuswiss.com
பிரித்தானிய பிரதமர் நாட்டில் உள்ள ஹோட்டல்களை கொரோனா தனிமைப்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளனது. பல புதிய வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் உருமாறத் தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானியாவுக்கு வரும் சில பயணிகள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு பிரித்தானிய அரசாங்கம் புதிய திட்டத்தை அறிவிக்கவுள்ளது.

அதாவது பிரித்தானியாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் தனிமைப்படுத்துவதற்கான இடங்களாக மாற்றும் புதிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவது குறித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிக்கவுள்ளார்.

இதனால், பிரித்தானிய மக்கள் யாரும் தங்கள் விடுமுறைகளுக்காக ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவுக்குள் இந்த hotel quarantine திட்டம் குறித்து முடிவெடுக்கப்பட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என பிரித்தானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஏற்கெனவே தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா வைரஸ்கள் ஊடுருவியுள்ள நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டால், வெளிநாடுகளிலிருந்து வரும் எந்த ஒரு பயணியும் இனி ஹோட்டல் அறைகளில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ad

ad