புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2021

பிரிட்டனில் – 20 டிகிரி: பார ஊர்திகள் குடைசாய்கிறது கென்ட் நகரில் மேலும் பனிப் பொழிவு வருகிறது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவின் பல பகுதிகளில் குளிர் – 20(மயினஸ் 20) க்கு சென்றுவிட்டது. அதிலும் குறிப்பாக லண்டனை அடுத்துள்ள கென்ட் மற்றும் டோவர் பகுதிகளில் – 20 குளிர் காணப்படுவதால், அங்கே செல்லும் நூற்றுக் கணக்கான பார ஊர்திகள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வதாக கூறப்படுகிறது. அவை வீதிகளில் இருந்து விலகிச் செல்வதாக பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.


இது இவ்வாறு இருக்க, இன்று வியாழக் கிழமையோடு இந்த குளிர் குறைந்து விடும் என்றும். ஆர்டிக் பகுதியில் இருந்து வந்த இந்த குளிர் கடந்து சென்று விடும் என்று எதிர்வு கூறப்பட்ட நிலையில். மேலதிக குளிர் காற்று லண்டனை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக சற்று முன்னர் வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும் என்று அது மேலும் அறிவித்துள்ளது.

ad

ad