புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2021

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா இந்தியா?

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்குமென நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. ஆனால் அதன் பின்னர் இந்தியா நடுநிலை வகித்தே வந்துள்ளது. இம்முறை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்தியாவை நாம் கோருவோம்.

இந்தியாவிலும் பெருமளவான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.அவர்களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துத்தான் இந்தியா செயற்படுமென நான் நினைக்கின்றேன்.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் நாடுகளுடன் தாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றும் கூட பிரித்தானிய தூதுவருடன் நீண்டநேரம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

ad

ad