புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2021

நாம் தமிழர் கட்சி.அ.தி.மு.க-வுடன் கூட்டணியா? - வெளியான பரபரப்பு தகவல்

www.pungudutivuswiss.com
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைய வாய்ப்பிருப்பதாக அதிமுக மூத்த தலைவர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைய வாய்ப்பிருப்பதாக அதிமுக மூத்த தலைவர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியை பொருத்தவரை தற்போது பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ஆகியவை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு சில கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் 10 தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு கூட்டணியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுகமூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அவ்வாறு நாம் தமிழர் கட்சி அதிமுக கூட்டணியில் வருவது உறுதி என்றால் தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad