தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளதுடன், பெருமளவான பொது மக்களும் இணைந்துள்ளனர்.ஓரணியில் திரண்ட தமிழ் கட்சிகள்! கொட்டும் மழையிலும் தொடரும் உரிமை போராட்டம்
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது தற்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பு இருந்து அட்டாளைச்சேனை ஊடாக பேரணி தொடர்ந்து செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளதுடன், பெருமளவான பொது மக்களும் இணைந்துள்ளனர்.
கட்சி வேறுபாடுகளை கடந்து, அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என்று ஏராளமானவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.