புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2021

கலையரசனுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல்

www.pungudutivuswiss.com
அம்பாறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்கும் இராணுவத்தினருக்குமிடையே நேற்று பிற்பகல் தம்பிலுவில் சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.


அம்பாறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்கும் இராணுவத்தினருக்குமிடையே நேற்று பிற்பகல் தம்பிலுவில் சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மக்களை சந்திக்க சென்ற வேளை சோதனைச்சாவடியில் நின்ற இராணுவத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரது வாகனத்தை சூழ்ந்து தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

பிரதான வீதியில் வாகனத்தை நிறுத்தி அவமதிக்கும் நோக்கோடு வாகனத்திலிருந்து இறங்குமாறு சத்தமிட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது முறுகல் ஏற்பட்டது.

நாளைய பேரணிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பதாகைகள் துணிகள் ஏதும் உள்ளதா என்றும் திருக்கோவில் பிரதேத்திற்கு செல்லமுடியாது என இராணுவத்தினர் கூறியவேளை முறுகல் நிலை தோன்றியது என நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவித்தார்.

ad

ad