புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2021

தமிழ் தேசிய பேரவையை உருவாக்க முடிவு- சுரேஸ் பிரேமச்சந்திரன்

www.pungudutivuswiss.com
அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள் சந்தித்து, இன்று இருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வந்திருந்த முதலாவது வரைவு தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்ததாகத் தெரிவித்தார்.

26ஆம் திகதி வவுனியாவில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும் பல்வேறுபட்ட ஆதின முதல்வர்களும் சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து, கலந்துரையாடவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

"அதில் முக்கியமாக தமிழ் மக்களினுடைய அரசியல் கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இந்த முதலாவது வரைபில் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை. அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற என்ற விடயமாக இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

"ஆனால், அந்த முதலாவது வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை. எனவே, 26ஆம் திகதி அடுத்த கட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்றுகூடி பேசவுள்ளோம்" எனவும், அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக, தற்போது தாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழர் தரப்பில் இருக்க கூடிய ஏனைய கட்சிகள் கூட இணையலாம் எனவும் தாங்கள் இந்த பத்து கட்சிகளையும் மிக விரைவாக ஒரு தமிழ்த் தேசிய பேரவையாக உருவாக்குவதற்கான கோரிக்கை இப்பொழுதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது எனவும் கூறினார்.

"அந்த கோரிக்கை இங்கு வந்திருந்த அனைத்து கட்சியினராலும் பேசப்பட்டது. "எனவே, இந்த விடயம் தொடர்பில் தொடா்பில் பேசப்பட இருக்கின்றது. அத்தோடு, வருகின்ற 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி இந்த தமிழ்த் தேசிய பேரவை உருவாக்குவது பற்றிய இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ad

ad