புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2021

சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டது ஏன்? - பொலிஸ்மா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி

www.pungudutivuswiss.com.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற நிலையில் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்பட்டிருத்த விசேட அதிரடிப்படையினரை நீக்கியது ஏன் என்ற கேள்வி எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் பாராளுமன்றதத்திலும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய வேளையில்,சுமந்திரன் எம்.பி விடுதலைப்புலிகளின் நினைவேந்தளில் கலந்து கொள்கின்றார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பு விடயங்களை கேள்விக்கு உற்படுத்தும் விடயமாகின்ற காரணத்தினாலும், இலங்கையின் பாதுகாப்பு படைகளை குற்றம் சுமத்திக்கொண்டு அவர்களின் பாதுகாப்பை கேட்பது என்ன நியாயம் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளதால் நானே சுமந்திரன் எம்.பிக்கான பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுத்தேன் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனின் விசேட பாதுகாப்பை நீக்கியமை குறித்து பொலிஸ்மா அதிபர் அறிக்கை ஒன்றினை தருமாறு கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இது குறித்து பொலிஸ்மா அதிபரின் பதில் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

ad

ad