புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2021

குறிகாட்டுவானில் இருந்து திரும்பிய மீனவர்கள் இருவர் மாயம்! - படகு நெடுந்தீவில் கரையொதுங்கியது.

www.pungudutivuswiss.com
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறிகாட்டுவானிலிருந்து நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற் போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். குறிகாட்டுவானிலிருந்து நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஞா. றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர். அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad