புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2021

திருநெல்வேலியில் முடக்கப்பட்டுள்ள 1100 குடும்பங்கள்! - உதவுமாறு கோரிக்கை

www.pungudutivuswiss.com
திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டு உள்ளதால், அங்கு வாழும் 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன், கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டு உள்ளதால், அங்கு வாழும் 1100 குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன், கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி சந்தையிலும் அதைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களிலும் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, 127 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அதில், 51 பேர் திருநெல்வேலி மத்தி, வடக்கு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து குறித்த கிராம சேவையாளர் பிரிவு, ஞாயிற்றுக்கிழமை முதல் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்குள், வெளியில் இருந்து உள்நுழையவும், அப்பகுதியிலிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிக்குள் 1,100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த அவர், அதில் அநேகமானவர்கள் திருநெல்வேலி சந்தையில் தொழில் புரிபவர்களும் கூலித் தொழிலாளிகளும் உள்ளடங்குகின்றனர். ஆகையால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உறவுகள் முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தா

ad

ad