புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2021

யாழ்ப்பாணத்தில் இணையத்தள, யூரியூப் சனல் அலுவலகம் முற்றுகை! - இருவர் கைது.

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையத்தளம் மற்றும் யூரியூப் சனலில் பரப்புரை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் இரண்டு பேரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், கைது செய்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையத்தளம் மற்றும் யூரியூப் சனலில் பரப்புரை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் இரண்டு பேரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாண நகரில் இணையத்தளம் மற்றும் யூரியூப் சனலை நடத்திய அலுவலகம் அடையாளம் காணப்பட்டு அந்த இடம் இன்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன்போது, அந்த இடத்துக்கு பொறுப்பாக இருந்த 35 வயது பெண், 36 வயது ஆண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கணினிகள் 05 மற்றும் மடிக்கணினிகள் 05 உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்

ad

ad