புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2021

யாழ்.வைத்தியசாலையில் புதிய கொத்தணி உருவாகும் ஆபத்து

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் 26 பேர் உள்ளிட்ட 29 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் 26 பேர் உள்ளிட்ட 29 பேருக்கு வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 மருத்துவர்கள், தாதியர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர், சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவர், மேலும் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேர் என 19 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. காரைநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பஸ் சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

திருநெல்வேலி பொதுச் சந்தையைச் சேர்ந்த மேலும் இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாந்தை மேற்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ad

ad