-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 மார்., 2021

சாணக்கியனும், சுமந்திரனும் மாவையை ஓரம்கட்டுகின்றனர்-.சிறிதரன் சாணக்கியனும், சுமந்திரனும் மா

www.pungudutivuswiss.com
மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் கட்சிக்குள் பெரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாகவும், அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கியனும், சுமந்திரனும் மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் கட்சிக்குள் பெரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாகவும், அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் கிழக்கிலிருந்து சாணக்கியனும், சுமந்திரனும் அந்த கூட்டத்தில் பேசியிருந்தார்கள். மாவை சேனாதிராசா ஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அதில் பங்கு கொள்ளவில்லை. அவருக்கு அந்த விடயம் பேசப்படவில்லை அல்லது அவர் அதில் கலந்து கொள்ளுமாறு கேட்கப்படவில்லை என்ற ஒரு மனக்குறை அவருக்கு உள்ளது.
என்னை அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேட்கப்பட்டிருந்தது. எனினும் எனக்கு புதுக்குடியிருப்பில் வேறொரு நிகழ்வு இருந்தது. குறித்த கூட்டத்திற்கு மாவை சேனாதிராசாவை அழைப்பதாக சுமந்திரன் எனக்கு கூறியிருந்தார் என்ற போதும் அவரை அழைத்ததாக நான் அறியவில்லை.
இதுவரை கேட்ட போதும் மாவை அப்படியொன்று இல்லை என்ற வகையில் தெரிவிக்கிறார். இதெல்லாம் கட்சிக்குள் பெரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்தாலோ, கிழக்கிலிருந்து வடக்கிற்கு வந்தாலோ அங்கிருக்கும் கட்சியின் தலைவர் அல்லது செயலாளர் ஆகியோரை சந்திக்க வேண்டியது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த உள்ளூராட்சி தேர்தலில் எங்கள் கட்சியில் பல இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காததால் வேறு கட்சியில் தேர்தலில் நின்று வென்றிருந்தார்கள் பலர். அவர்களில் பல தமிழ் தேசியத்தை நேசிக்கும் இளைஞர்கள், ஒற்றுமையை விரும்பும் இளைஞர்கள் தமிழரசுக் கட்சிக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
கட்சிக்குள் கூட்டுப்பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற நாம், தேர்தலில் தோற்ற எம் சக வேட்பாளர்களையும் அரவனைத்து செல்லும் மனநிலையில் இருக்க வேண்டும்.
கட்சியில் பொறுப்புக்கள் அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய களம் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். கட்சிக்குள் ஒவ்வொரு ஆதரவாளர்களும் ஒருவொருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் தாக்கி பேசும் நிலை மாற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த வேண்டும். இவை தான் கட்சியின் ஒற்றுமையை வளர்க்கும்.
இனிவரும் தேர்தல்களில் களம் இறக்கப்படும் வேட்பாளர்களின் கல்வித்தரம், சமூக ஈடுபாடு, சமூக அந்தஸ்து ஆகியவை பார்க்கப்பட்டே வேட்பாளர்களாக இறக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்

விளம்பரம்