-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 மார்., 2021

ஜேர்மனிக்குள் நுழையும் அனைவருக்கும் புதிய விதிமுறைகள்

www.pungudutivuswiss.com
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், ஜேர்மனிக்குள் விமானம் மூலமாக நுழையும் அனைவருக்கும் புதிதாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

இதற்கு முன் அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மட்டுமே, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கும் ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்கவேண்டுமென்ற விதி இருந்தது.

ஜேர்மன் சுகாதாரத்துறை, வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) நள்ளிரவு 12 மணியிலிருந்து, ஜேர்மனிக்குள் விமானம் வாயிலாக நுழையும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என நேற்று அறிவித்தது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதிகளின்படி, பயணிகள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும்.

கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் வைத்திருப்போர் மட்டுமே விமானம் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

விளம்பரம்