புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2021

இலங்கைக்கு எதிரான தீர்மானம் - ஜெனிவாவில் இன்று விவாதம்

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஆறு நாடுகள் முன்வைத்துள்ள தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஆறு நாடுகள் முன்வைத்துள்ள தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அது தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று அல்லது நாளை இடம்பெறும். இந்த ஆறு நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை இலங்கை முழுமையாக நிராகரித்துள்ளது.

சீனா, ரஷ்யா, பிலிப்பின்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவை 47 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad