புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2021

போர் விமானத்தை அனுப்பி விமானத்தை தரையிறக்கிய பெலரூஸ்! பத்திரிகையாளர் கைது!

www.pungudutivuswiss.com

கிறீசின் தலைநகர் ஏதன்சிலிருந்து லிதுவேனியன் தலைநகர் வில்னியஸுக்கு றையன் ஏயர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது மிக்-29 போர் விமானத்தை அனுப்பி றையன் ஏயர் விமானத்தைத் தரையிறக்கி நெக்ஸ்டா மீடியா நெட்வொர்க் அதன் முன்னாள் ஆசிரியர் ரோமன் புரோட்டசெவிச் கைது செய்யப்பட்டுள்ளார் என பெலாரூஸ் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட றையன் ஏயர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியே குறித்த விமானம் பெலரூஸின் தலைநகர் மின்ஸ்க்கு திருப்பி விடப்பட்டது. ஆனால் விமானத்தில் எதுவித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரோமன் புரோட்டசெவிச் டெலிகிராம் மெசேஜிங் பயன்பாட்டின் நெக்ஸ்டா சேனலின் இணை நிறுவனர் ஆவார். இது பெலரூஸ் நாட்டின் அதிபர் லுகாஷென்கோவுக்கு எதிராக பெரிய போராட்டங்களை ஒழுங்கமைக்க உதவப் பயன்படுத்தப்பட்ட பின்னர் பெலாரூஸ் அரசால் கடந்த ஆண்டு "தீவிரவாதி ரோமன் புரோட்டசெவிச்" என்று அறிவித்தது.

இச்செயலை ஐரோப்பிய நாடுகள் பெலரூஸ் நாட்டின் அரச பயங்கரவாதம் என எதிர்வினையாற்றியுள்ளன.

விமானம் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளூர் நேரப்படி சுமார் 21:30 மணிக்கு (18:30 GMT) லிதுவேனியாவில் தரையிறங்கியது.

விமானங்கள் பெலாரஷ்ய வான்வெளியைத் தவிர்க்கவும், பெலாரஷ்ய தூதர்களை வரவழைக்கவும், வணிக விமானங்களைத் திசைதிருப்ப இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கூட்டாக பரிந்துரைக்க லிதுவேனியா அழைப்பு விடுத்தது

ad

ad