புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2021

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு பூட்டு!

www.pungudutivuswiss.com
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், கொழும்பு மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், கொழும்பு மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

“அந்த அலுவலகம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் பணியாட் தொகுதியினர், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்நிலையில், எத்துல்கோட்டையில் இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad